tamilnadu

img

இராணுவ வீரர்களுக்கான வானொலி

வானொலி கேட்கும் வழக்கம் தற்போது மக்களிடையே குறைந்து வரும் நிலையில் அந்த ஊதகத்தை மிக திறம்பட பயன்படுத்துவதில் முக்கிய பங்குவகிப்பது அரசுகளுக்கு அடுத்தது இராணுவம் என்றால் அது மிகையாகாது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாடுகளின் இராணுவங்கள் தங்களுடைய படைகளுக்கென்று தனியாக வானொலியை நடத்திவருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்காது.

அமெரிக்கா போர்ஸ்ஸுசு நெட்ஒர்க் என்பது அமெரிக்கா இராணுவ வீரர்களுக்காக அந்த நாட்டு அரசால் நடத்தப்படும் வானொலி, இதே போன்று பிரிட்டனும் பிரிட்டிஷ் போர்ஸ்ஸுசு  ப்ரோட்கேஸ்டிங் சர்விசிஸ் என்ற வானொலியும், இஸ்ரேல் தன் பங்கிற்கு ஆர்மீ ரேடியோ என்ற வானொலி நிலையத்தை நடத்திவருகிறது.

பிரிட்டிஷ் படைகள் ஒலிபரப்பு சேவை (BFBS) பிரிட்டிஷ் ஆயுதப்படைகளுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறது, இந்த நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் இராணுவ அமைச்சகம் எந்த குறுக்கீடும் செய்வதில்லை என அந்த வானொலியின் இணையதளத்தில் அது தெரிவித்துள்ளது.

இந்த வானொலி பிரிட்டிஷ் போர் அலுவலகம் (இப்போது பாதுகாப்பு அமைச்சகம்) 1943 இல் நிறுவியது. ஆரம்பத்தில் ஃபோர்ஸஸ் பிராட்காஸ்டிங் சர்வீஸ் (FBS) என அறியப்பட்ட இந்த வானொலி பிரிட்டிஷ் இராணுவ நல சேவையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அதன் முதல் தலைமையகம் (மத்திய கிழக்கு ஒளிபரப்பு பிரிவு), எகிப்து தலைநகரான கெய்ரோவில் இருந்தது.

பிரிட்டிஷ் படைகள் வானொலியில் (BFBS) இசை, செய்தி, பொழுதுபோக்கு மற்றும் சமூக சேவை செய்திகள் போன்றவை உலகத்தில் உள்ள பிரிட்டிஷ் படைகளுக்கு தகுந்தவாறு தயாரிக்கப்பட்டு வழங்குவதோடு, படைகளை மையமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள படைகளை இணைக்கும் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது.

பிரிட்டிஷ் இராணுவம் மூன்று வானொலிகள் நடத்துகின்றது-BFBS சமகால இசை மற்றும் படைகள் சமூக வானொலி, BFBS வானொலி 2 - பிரபலமான இசை, செய்தி, நாட்டு நடப்பு விவகாரங்கள் மற்றும் விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்கள், BFBS கூர்க்கா ரேடியோ - கூர்க்கா படையினருக்கான நேபாள மொழி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பும்.

அமெரிக்க இராணுவம் AFN உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு முகமை, அமெரிக்க இராணுவ வீரர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் பிற அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அவர்களது வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்களில் வாழும் இராணுவத்தினரின் குடும்பங்கள், மற்றும் கடற்படையில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ஆகியவற்றிற்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவருகிறது.

அமெரிக்கப் படைகளின் முகமை மே 26, 1942 இல் அமெரிக்க போர் துறையின் மூலம் இந்த ஆயுதப் படைகள் வானொலி சேவையை (AFRS) நிறுவியது. 1954 ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகளின் முகமை முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி சேவையை மைலே நகரில் உள்ள லியெம்ஸ்டோன் இராணுவ தளத்தில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.

அமெரிக்க கடற்படை தளங்களுக்கு மற்றும் அதன் கப்பல்களுக்கு வானொலி சேவையை சிற்றலை ஒற்றை பவர் பேண்ட் அலைவரிசையின் மூலம் வழங்கிவருகிறது. உலகெங்கிலும் உள்ள மறுஒலிபரப்பு தளங்கள் வழியாக ஒற்றை பவர் பேண்ட் சிற்றலை மூலமும் AFN ரேடியோ ஒளிபரப்புகள் மக்களுக்கு இந்த வானொலி நிலையம் வழங்குகிறது. இந்த வானொலி சேவை டீகோ கார்சியா, குவாம், இத்தாலி நகரமான சிகோனெல்லாவில் உள்ள அமெரிக்க கடற்படை விமான நிலையம், பியூர்டோ ரிகோ, ஹவாய் மற்றும் இதர மறுஒளிபரப்பி தளங்கள் மூலமும் ஒலிபரப்பிவருகிறது.

தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது AFN வானொலி செயற்கைகோள் வாயிலாகவும் சேவையை வழங்கிவருகிறது.

நேயர்கள் இந்த வானொலியை 12,579 கிலோஹெர்ட்ஸ், 13,362 கிலோஹெர்ட்ஸ், 5,765 கிலோஹெர்ட்ஸ், மற்றும் 4,319 கிலோஹெர்ட்ஸ் ஆகிய சிற்றலை அலைவரிசைகளில் கேட்கலாம். AFN வானொலியை கேட்டு அந்த வானொலி நிலையத்திற்கு கடிதம் அனுப்பினால் நாம் நிகழ்ச்சியை கேட்டு கடிதம் அனுப்பியதற்கான அடையாளமாக ஒரு வண்ண கியூ.எஸ்.எள் அட்டையை அவர்கள் அனுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

இராணுவ வானொலி என்பது இஸ்ரேல் பாதுகாப்புப் படையால் நடத்தப்படும் ஒரு நாடு தழுவிய வானொலி ஒளிபரப்பாகும். இந்த வானொலி நிலையம் செய்தி, இசை, போக்குவரத்து அறிக்கைகள் மற்றும் கல்வித் தொடர்பான செய்திகளை பொது மக்களுக்கும், பொழுதுபோக்கு மற்றும் இராணுவ செய்திகளை இராணுவப்படை வீரர்களுக்கு வழங்கும்.

செப்டம்பர் 24, 1950 அன்று, இஸ்ரேல் சுதந்திரப் போரின் போது யூத மக்களுக்காக தன் ஒளிபரப்பை இந்த வானொலி துவங்கியது.

இந்த வானொலி நிலையமானது பாதுகாப்பு அமைச்சரால் 3 முதல் 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்ட ஒரு பொதுமக்களால் நிர்வகிக்கப்படுகிறது.

நமது இந்தியாவில் இந்த வானொலிகள் போன்று இராணுவ படைவீரர்களுக்குயென்று தனியான வானொலி இல்லையென்றபோதும் அகில இந்திய வானொலி இராணுவ வீரர்களுக்கு தனி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவருகிறது. இந்த நிகழ்ச்சிகளை பல இராணுவ வீரர்கள் கேட்டு மகிழ்ந்துவருகிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியில் படிக்கப்படும் அவர்கள் பெயர்களைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம்.